Posts

Showing posts from November, 2020

கற்போம் எழுதுவோம்- தன்னார்வலர் களுக்கான பயிற்சி

Image
இன்று (18.11.2020) ஒருங்கிணைந்த கல்வி,காடையாம்பட்டி வட்டார வள மையம் சார்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தீவட்டிப்பட்டியில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் காடையாம்பட்டி ஒன்றியத்திற்குடபட்ட  8 குறுவள மையங்களில் உள்ள கற்போம் எழுதுவோம் மையங்களை சார்ந்த தன்னார்வலர்களுக்கான புத்தாக்க பயிற்சி காலை தொடங்கியது. இப் பயிற்சியினை பெருமதிப்பிற்குரிய சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.செல்வம் ஐயா அவர்கள் தொடங்கி வைத்தார்கள். பயிற்சியில் மதிப்புக்குரிய வட்டார கல்வி அலுவலர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் .வட்டார வள மைய மேற்பார்வையாளர் அவர்கள் தன்னார்வலர்களின் பணிகள் எடுத்துரைத்தார்கள்.மேலும் கற்போம் எழுதும் இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு. பிரகாசம் ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இப்பயிற்சியானது இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. பிறகு தன்னார்வலர்கள் அவரவர் மையங்களில் வரும் 23.11.2020  தங்களின் பணியை தொடருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

EMIS கைபேசி செயலி வாயிலாக கற்போர்* *(Learners) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் (volunteer teachers) விவரங்களை பதிவேற்றம் செய்தல்*

Image
*பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்* கற்போம் எழுதுவோம் இயக்கம் புதிய வயது வந்ததோர் கல்வித் திட்டம் *TN EMIS கைபேசி வாயிலாக கற்போர்* *(Learners) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் (volunteer teachers) விவரங்களை பதிவேற்றம் செய்தல்* சார்ந்து இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

GALLERY

PLA - REVIEW MEETING ( கற்போம் எழுதுவோம் மீளாய்வுக் கூட்டம்)

Image
*மதிப்பிற்குரிய சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் இன்று காணொளி மூலம் (5.11.2020) நடைபெற்ற ("கற்போம் எழுதுவோம்") கூட்டத்தில், காடையாம்பட்டி ஒன்றியம் சார்பாக வட்டார கல்வி அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் கலந்து கொண்டனர்.. .* *பணியினை விரைந்து முடித்தமைக்காக காடையாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவிஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது ...*