கற்போம் எழுதுவோம்- தன்னார்வலர் களுக்கான பயிற்சி
இன்று (18.11.2020) ஒருங்கிணைந்த கல்வி,காடையாம்பட்டி வட்டார வள மையம் சார்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தீவட்டிப்பட்டியில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் காடையாம்பட்டி ஒன்றியத்திற்குடபட்ட 8 குறுவள மையங்களில் உள்ள கற்போம் எழுதுவோம் மையங்களை சார்ந்த தன்னார்வலர்களுக்கான புத்தாக்க பயிற்சி காலை தொடங்கியது. இப் பயிற்சியினை பெருமதிப்பிற்குரிய சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.செல்வம் ஐயா அவர்கள் தொடங்கி வைத்தார்கள். பயிற்சியில் மதிப்புக்குரிய வட்டார கல்வி அலுவலர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் .வட்டார வள மைய மேற்பார்வையாளர் அவர்கள் தன்னார்வலர்களின் பணிகள் எடுத்துரைத்தார்கள்.மேலும் கற்போம் எழுதும் இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு. பிரகாசம் ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இப்பயிற்சியானது இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. பிறகு தன்னார்வலர்கள் அவரவர் மையங்களில் வரும் 23.11.2020 தங்களின் பணியை தொடருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment