*கற்போம் எழுதுவோம், இயக்கம் சாராம்சம்:*
* புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் மையம் அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும். * 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களை சேர்க்க வேண்டும். அந்தந்த பள்ளியின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பகுதியில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாத அவர்களுடைய பட்டியலை முதலில் தயார் செய்ய வேண்டும்.இதற்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட களப்பணியாளர்களிடம் உள்ள பதிவேடுகளை பயன்படுத்திக்கொள்ளலாம். * குறைந்தது 20 நபர்கள் இருக்க வேண்டும். * அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் 2 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும். * பாடம் நடத்த தன்னார்வலர் ஒருவரை பள்ளி மேலாண்மை குழு மற்றும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்,மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள்,தொண்டு நிறுவனங்கள்,JRC,SCOUT,NSS போன்ற அமைப்புகளில் பணிபுரியும் மாணவமாணவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தன்னார்வலர்கள் முன்வராத பட்சத்தில் ஆசிரியர்களே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் அந்தந்த பகுதியில...